சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறமாக உள்ள வாகன நிறுத்த பகுதியில் குவியல் குவியலாக மது பாட்டில்கள். மாவட்ட ஆட்சியரின் நான்கு தலங்களில் உள்ள சில கழிவறைகளில் மது பாட்டில்கள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு தளங்கள் உள்ளன நான்கு தளங்களிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிகின்றனர். காவல் துறையின் சோதனைக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் நுழைவாயில் சோதனை பின்பு தான் அனைவரும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் சில கழிவறைகளில் மது பாட்டில்கள் இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் பின்புறம் உள்ள வாகன நிறுத்தத்தில் அதிக அளவிலான மது பாட்டில்கள் கிடக்கின்றது. இங்கு மது பாட்டில்கள் வர யார் கரணம் என பரவலாக கேள்வி எழுகிறது.
இங்கு மது அருந்துகிறவர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தான் அனுமதிக்கப்படுகிறார்கள் அனைவரும். யாரேனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மது அருந்துவதற்காக வருகிறார்களா என்ற கேள்வியும் உள்ளது. காவல்துறையின் மெத்தனப்போக்கும் இதற்க்கு காரணம் என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். இதை கண்காணிக்க வேண்டிய காவல்துறையும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் மெத்தனப்போக்காக இருப்பது பொது மக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
விரைவில், வாகன நிறுத்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும், அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் இங்கு வரும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவிலான பெண் குழந்தைகளை பெண்கள் அதிக அளவில் ஆதார், மருத்துவ அட்டை, குடும்ப அட்டை, உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்காக வாகன நிறுத்த பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் இந்த மது பாட்டில் கிடப்பது, அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனை அனைத்தையும் சரி செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.