கர்நாடகாவில் அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது .
கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது .வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுக்களைக் கடந்த 13-ந் தேதி தாக்கல் செய்யத் தொடங்கி , கடந்த 20-ந் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து முடித்தனர் . 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் கர்நாடக மாநில தேர்தல் துறையால் வெளியிடப்பட்டது .
தென் இந்தியாவில் , பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் , இதனை நிலைநாட்டிக்கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது . இதே வேலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் பாஜக வுக்கு இணையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகினறனர் .
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா நகரில் தமிழ் மக்களின் ஆதரவை சேகரிக்கும் நோக்கத்துடன் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா ,தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் , மேடையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு கன்னடா மாநில பண் இசைக்க சொன்னார் . மேலும் அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடா மாநில பண் பாடப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னடா பண் இசைக்கப்பட்ட சம்பவம் பெரும் பூதகரம் அடைந்துள்ள நிலையில் இதுகுறித்து பாஜக தமிழ் நாடு மாநில தலைவரும் , கர்நாடக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார் இதில் அவர் ‘சிவமோகா கூட்டத்தின் போது இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் டியுனும்- மெட்டும் சரியில்லை’ இதனாலே பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது’என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் நாம் ஒரு விஷயம் செய்கிறோம் என்றால் நமது தமிழ்தாய் வாழ்த்து முதலில் போடுவோம். அதே போன்று கர்நாடகாவில் கர்நாடகாவின் பாடலை தான் முதலில் போடுவார்கள்.அதை தான் ஈஸ்வரப்பா செய்தார்கள் அதில் எந்த தவறும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் .
அண்ணாமலையின் இந்த விளக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது . மேலும் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றல் அவருக்கு எதிர்க்க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.