கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொள்கிறார். கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
சித்தராமையாவை தொடர்ந்து துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் பதவியேற்க உள்ளார் .
பதவியேற்பு விழா கர்நாடக ஆளுநர் மாளிகையில் சரியாக பகல் 12:30 மணி அளவில் நடக்க இருப்பதை அடுத்து முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது .
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் பதவியேற்கும் மல்லிகார்ஜுன கார்கே மகன் உட்பட 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது உள்ளிட்ட 8 பேர் இன்று அமைச்சராக பதவி ஏற்கின்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மதம் 10 ம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது . இந்த தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது , பதிவான வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டது .
காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை முக்கிய காட்சிகளாக கருதப்பட்டது . இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கள் வெளியானது .

224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் , தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி 135 காட்சிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது . எனினும் முதல்வர் , துணை முதலவர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கஇழுபறி நீடித்தது .
முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது . சுமார் மூன்று நாட்களுக்குமேல் நடத்தப்பட்ட பல்வேறுகட்ட கலந்தாய்வு கூட்டாட்சிற்கு பிறகு இறுதியாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , பொது செயலாளர் கேசி வேணுகோபாலுடன் இறுதி கட்ட ஆலசோனை நடத்தப்பட்டது .
இதில் சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராகவும் , டி கே சிவகுமாரை துணை முதல்வர் வேட்பாளராகவும் இறுதி செய்ய பட்டனர் .
இந்நிலையில் இன்று கர்நாடக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி , ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி , தமிழ் நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜீ உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளனர் . பதவி ஏற்பு விழாவை முன்னீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .