நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது சாலையின் இரு பக்கமும் யானைகள் ஆங்காங்கே நடமாடி வருகிறது.
இந்த நிலையில் தொரப்பள்ளி அருகே ஒரு வாகனம் கூடலூரை நோக்கி வரும்போது சாலை ஓரத்தில் ஒரு காட்டு ஆண் யானை ஒன்று மேச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது வாகனம் வருவதை அறிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தியது.
அந்த வாகனத்தின் ஓட்டுனர் சாதுரியமாக வாகனத்தை பின்னோக்கி இயக்கி யானை தாக்குதலில் இருந்து தப்பித்தார். இந்த காட்சியானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது பற்றி வனத்துறையினர் கூறுகையில் ஆங்காங்கே காட்டு யானைகள் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.