மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திடத்தில் பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக ஏற்பட்ட குழப்ப நிலையில்.
இந்த பணிகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.\
அதன்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
இதே போன்று, வருவாய்த்துறையால் மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்களும் தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த முகாம்களில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பம் பதிவு செய்ய தவறியவர்களும் பயன்பெறலாம் என கூறியுள்ளார்.