மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மீது 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார், முன்னதாக இந்த தாக்குதல் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
ஆகஸ்ட் 10ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை சீதாராமன் நினைவுபடுத்த முயன்றார்.
அப்பொழுது பேசிய அவர் ‘ மிகவும் புனிதமான சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டது அப்பொழுது அந்த அவையில் அமர்ந்திருந்த திமுகவினர் அவரை கேலி செய்து சிரித்தனர் . அனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
அப்போது ஆட்சியில் இருந்த திமுக கட்சிஇன்று திரௌபதி பற்றி பேசுகின்றனர் , என சீதாராமன் கூறினார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மறைந்த ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு, ‘சட்டமன்றத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும், அந்த சம்பவம் ஜெயலலிதா தாமே நடத்திய நாடகம்’ என, மத்திய அமைச்சர் சீதாராமனின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தின்போது ஜெயலலிதாவுடன் இருந்த தற்போது காங்கிரஸ் எம்.பி யும், அதிமுக முன்னாள் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், ஜெயலலிதாவால் ஒத்திகை பார்ட்கப்பட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று தெரிவித்திருந்ததையும் ஸ்டாலின் அவரது அறிக்கையில் தற்போது நினைவுகூர்ந்துள்ளார் .
தர்பூது இந்த விவாதம் பூதாகாரம் ஆகியுள்ள நிலைமையில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது அதிமுக எம்எல்ஏ என்ற முறையில் அவையில் தானும் இருந்ததாக கூறி இந்த விவகாரத்தை பெரும் பேசும் பொருளாக மாற்றியுள்ளார் .
அப்போது அம்மா (ஜெயலலிதா) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
அவர்கள் மானபங்கம் செய்யப்பட்டபோது நான் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம் என்பதால் அவருடன் எம்எல்ஏவாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஸ்டாலின் அந்த சம்பவமே ஒரு நாடகம் என்று தெரிவித்திருந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறினார்.
இது குறித்து விரிவாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி முன்னிலையில் தான் அந்த சம்பவம் சட்டசபையில் நடந்தது. திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அம்மாவை மோசமாகத் தாக்கினார்கள்.இப்போது மூத்த அமைச்சர் ஒருவர் சேலையை இழுத்தார், மற்றொரு முன்னாள் அமைச்சர் முடியை இழுத்தார், அது ஒரு கருப்பு நாள்,” என்று பழனிச்சாமி தெரிவித்தார் .
அந்த நிகழ்வு சட்டசபை வரலாற்றில் மிக மோசமான ஒன்று . எந்த ஒரு பெண் உறுப்பினரும் அல்லது எதிர்க்கட்சி தலைவரும் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அந்த சம்பவத்தை மறைத்து , தரம் தாழ்த்தி பேசிவருகிறார் . என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .