2024 மக்களவை தேர்தல் : இந்தியா vs தேசிய ஜனநாயகக் கூட்டணி vs கூட்டணியில் சேராத நடுநிலை கட்சிகள்

0
112
File Picture

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை மற்றும் டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், புதிய வீரியத்துடனும், எதிர் கட்சிகள் செயல்படும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகின்றது .

இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சி ஜாம்பவான்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், இதுவரை மொத்தம் 64 அரசியல் கட்சிகள் தங்களை ஏதேனும் ஒரு கூட்டணியுடன்  இணைத்துக் கொண்டு கூட்டணியை உறுதி செய்துள்ளனர் .

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு எதிராக திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள், செவ்வாய்கிழமை பெங்களூருவில்  ​​அதிகாரப்பூர்வமாக தங்கள் கூட்டணியை அறிவித்துள்ள சூழ்நிலையில் , இந்திய அரசியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏறப்டுத்தியுள்ளது .

திர்க்கட்சிகள் தங்கள் கூட்டணி இனி இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance  – INDIA   ) “இந்தியா” என்ற பெயரில் இயங்கப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளார் .

இதே வேலையில் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தங்களது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளடங்கிய  அதிமுக உள்ளிட்ட 38 கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டத்தை  நடத்தி தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளனர் . பிரதமர் நரேந்திர மோடி  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) புதிய முழு வடிவத்தை New India, Developed Nation, Aspiration of People of India என்று மாற்றி அமைத்துள்ளார்  . எதிர் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டிய சில மணிநேரங்களில் இந்த மாற்றம் நேர்ந்துள்ளது

இந்த கூட்டத்த்திற்கு தலைமை வகித்த  பிரதமர் நரேந்திர மோடி 2024 மக்களவைத் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளார் .

மக்களவை தேர்தல் நடக்க இன்னும் ஒருவருடத்திற்கு குறைவான காலமே உள்ள நிலையில் , இதுவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள்  ஏதேனும் ஒரு கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொண்டன.

இருப்பினும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பல முக்கிய கட்சிகள் இரு கூட்டணிகளுடனும் இணையவில்லை. இந்த நடுநிலைக் கட்சிகளின்   பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அகாலி தளம், பாரத ராஷ்டிர சமிதி, யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய லோக் தளம், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் மற்றும்  இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் அடங்கும் .

பகுஜன் சமாஜ் கட்சி : பிஜேபியை விமர்சித்து விமர்சித்து வரும் மாயாவதி தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் , எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைய விரும்பவில்லை என்றும் அவர்கள் கட்சி சார்பில்  தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜனதா தளம் (மதச்சார்பற்ற): கர்நாடகாவை சேர்ந்த ஜேடி(எஸ்) கட்சி முன்பு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும், சமீபத்திய கூட்டங்களில், அவர்கள் இரண்டு குழுக்களுடனும் இணைந்ததாகக் கண்டறியப்படவில்லை.கர்நாடகாவில் 2006-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து ஜேடி(எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்து மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அக்கட்சிக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்குப் போனதால், சமீபத்திய மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் JD(S) க்கு சாதகமான பலன்களைத் தரவில்லை. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும் எண்ணத்தில் அக்கட்சியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜு ஜனதா தளம் : பிஜேடி கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசாவை ஆட்சி செய்து வருகிறது, பிஜேபியுடன் நெருங்கிய உறவை வளர்த்து, அவர்களின் கொள்கைகளை ஆதரித்தது மற்றும் பிஜேபி வேட்பாளர் அஷ்வினி வைஷ்னாவை ராஜ்யசபா தொகுதியில் வெற்றி பெற அனுமதித்தது.

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பிஜேடி மற்றும் பிஜேபி போட்டியாளர்களாக இருக்கும் நிலையில், பிஜு ஜனதா தளம் ஒரு பிராந்திய கட்சியாக இருப்பதால், பிஜு ஜனதா தளம் கட்சிக்கென சொந்த கொள்கைகளை பின்பற்றி வருவதால் நடுநிலையாக இத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here