25-ந்தேதிக்குள்பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்அதிகாரிகளுக்கு ஆட்சியர்-ஷ்ரவன்குமார்

0
123
கலெக்டர் ஷ்ரவன்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் குவாரி பள்ளங்கள் ஆகியவற்றால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் அபாயங்களை குறைக்க அனைத்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள், இளைஞர்கள் குளிப்பதை தடுத்திட வேண்டும்.

பயன் பாட்டில் இல்லாத குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகள் வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும். பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகை மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைக்க வேண்டும். பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைப்பது அவசியம். கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கிராமங்களில் உள்ள செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்காணித்து அவற்றை மூட வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் செயல்படாத ஆழ்துளை கிணறு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி பள்ளங்கள் போன்ற இடங்கள் குறித்தும் அந்த இடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருந்திடவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடு இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி பள்ளங்களை கண்டறிந்து வருகிற (வெள்ளிக்கிழமை) 25-ந் தேதிக்குள் மூடிட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here