கடலூர், நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் கைதான 28 பேர் நீதிபதி முன்பு ஆஜர்
என்எல்சி கலவரத்தில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்தது காவல்துறை. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய போது அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தை அடக்குவதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்தும்,
கண்ணீர் புகை குண்டு போட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயம் அடைந்தனர்
அவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வன்முறையில் ஈடுபட்ட 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
வன்முறையில் ஈடுபட்டதாக பாமகவை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வந்திருக்கிறது.
போலீஸின் இந்த அதிரடி கண்டிப்பை பல தரப்பட்ட மக்கள் ஆதரித்து வருகின்றனர். பல நெட்டிசன்கள் இதற்க்கு ஹார்ட் விட்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.