தருமபுரி மாவட்டம் புளுதிக்கரை ஊராட்சிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (42) ,சுதா ( 35) தம்பதியின் மகன் மதியரசு(6). இரு தினங்களுக்கு முன்னர் சிறுவன் காணாமல் போயிருக்கிறார் .இந்நிலையில் அதே கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஒன்றில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறுவன் மதியரசு தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது,கடந்த 16 ஆம் தேதி வீட்டருகே விளையாட சென்ற சிறுவன் மாலை 6.30 மணியளவிலிருந்து காணாமல் போகவே, சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் தேடி வந்தனர்.
குடிநீர் தொட்டிக்குள் சிறுவன் சடலாமாக கிடந்தது எப்படி ? என்பது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் உயிர் போனதற்கு காரணம் செல்போன் என கூறப்படுகிறது.சிறுவன் மதியரசுவின் தூரத்து உறவினரான,மாதேஷ் என்பவரின் மகனான பிரகாஷ்(18) என்ற வாலிபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான தகவல் தெரிய வந்திருக்கிறது..
கடந்த 16ஆம்தேதி பிரகாஷின் செல்போனில் சிறுவன் மதியரசு வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்ததாகவும், நீண்ட நேரமாகியும் செல்போனை தர மறுக்கிறானே என எரிச்சலடைந்த பிரகாஷ் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து செல்போனை பறித்தாதகவும். இதில் சிறுவன் மயக்கமடைந்து கீழே விழுந்து விடவே அடித்த அடியில் சிறுவன் மதியரசு உயிரே போய்விட்டதே, விபரம் வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என அச்சத்தில் சிறுவனின் கை கால்களை கயிறால் கட்டி அருகே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சிறுவனை தள்ளி விட்டு தனக்கு ஓன்றும் தெரியாதது போல், நாடகமாடி நடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரகாஷின் பதிலில் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதில்,அவர் கொடுத்த வாக்குமூலம் திடுக்கிட வைத்திருக்கிறது.சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று,கை கால்களை ஒயரால் கட்டிப்போட்டு, ஆசன வாயில் கொடுரமாக உறவு கொண்டிருக்கிறார்.இந்த விபரத்தை வெளியே தெரிவித்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் சிறுவனை கொலை செய்து குடிநீர் மேல்நிலை தொட்டியில் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியதாக தெரிவித்திருக்கிறான் காம கொடூர இளைஞன் பிரகாஷ். பிரகாஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.