இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் நடைபெறும் , 69வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள் பட்டியல்:
மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகள் நடிகைகள் ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோனுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரப்படமாக மலையாளத் திரைப்படமான ‘கண்டிதுண்டு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரபல படத் தொகுப்பாளர் பி.லெனின் இயக்கிய சிற்பங்களின் சிற்பங்கள் படம் சிறந்த கல்வியல் படமாக தேர்வு செய்யப்பட்ட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவறை ஆவணப் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
’புஷ்பா1’ படத்தின் இசைக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக கீரவாணிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ’இரவின் மடியில் என்ற படத்தில் மாயவா தூயவா பாடலுக்கா ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.