ஆளும் பாஜக அரசு அமலாக்க இயக்குநரகத்தை (ED) ஏவி தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதால் சிலர் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினர் என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் சிவசேனா-பாஜக கட்சியில் சேர கிளர்ச்சி எம்எல்ஏக்கள் குழுவை வழிநடத்திய தனது மருமகன் அஜித் பவாரின் (பெயரைக் குறிப்பிடாமல்) , வளர்ச்சிக்கான காரணத்திற்காக அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக அவர்கள் கூறுவது உண்மையல்ல என்று பவார் கூறினார்.
“கடந்த காலத்தில் சில மாற்றங்கள் இருந்தன, எங்கள் உறுப்பினர்கள் சிலர் எங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் (அஜித் பவார் தரப்பை சேர்ந்தவர்கள் ) , வளர்ச்சிக்காகச் சென்றதாகச் சொல்கிறார்கள், ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. அவர்களுக்கு எதிராக அமலாக்க துறை விசாரணையைத் தொடங்கியாதல் அவர்கள் வெளியேறினர்.
கட்சி ஏற்பாடு செய்திருந்த சமூக ஊடக கூட்டத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் அவர் பேசினார்.
“இருப்பினும், சில உறுப்பினர்கள் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர். முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். தேஷ்முக் என்சிபி கட்சி மீது வைத்திருந்த விசுவாசத்தை மாற்றிக்கொள்ளும்படி அச்சுறுத்தப்பட்டார், ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார் (என்சிபியை விட்டு வெளியேறவில்லை. ),” என்று பவார் கூறினார்.
அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில், என்சிபியின் 8 எம்எல்ஏக்கள் ஜூலை மாதம் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மாநிலம் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, விவசாயிகளும் அதிகாலீவ்ல பாதிக்கப்பட்டுள்ளனர் ,” என்று சரத் பவார் கூறினார்.