விழுப்புரம் அருகே 40 வயது நிரம்பிய அமமுக நிர்வாகியால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 18 வயது நர்சிங் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விழுப்புரம் மாவட்டம் , வளவனுரிலுள்ள ஜெகநாதீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் முருகன் , ஓட்டுநர் , இவருக்கு லதா என்ற மனைவியும் , 2 மகள்களும் உள்ளனர் .
முருகனின் மூத்தமகள் முத்துலட்சமி 10 ஆம் வகுப்பு முடித்தபின்னர் வளவனுரில் அமமுக நிர்வாகி கந்தன் என்பவருக்கு சொந்தமான ராணி பாத்திர கடையில் சிறிது காலம் வேலை செய்துவந்துளார் ,
அந்த காலகட்டத்தில் அந்த கடையின் உரிமையாளர் கந்தன் (வயது 40) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார் .
இது அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே , கந்தனை கண்டித்து சிறுமியை வேளைக்கு அனுப்பாமல் வீட்டிலே தங்கவைத்துள்ளார் .
பிறகு இந்த ஆண்டு முத்துலட்சுமியை சென்னையிலுள்ள நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்த்துள்ளனர் .
இதனை அறிந்த கந்தன் முத்துலட்சிமியை சந்திக்க அடிக்கடி சென்னைக்கு சென்றுவந்துளார் . மேலும் முத்துலட்சுமியை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்திவந்துளார் .
கந்தனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில் , அவரது இந்த பாலியல் துன்புறுத்தல் முத்துலட்சுமிக்கு மிகுந்த சங்கடத்தை உருவாகியுள்ளது .
மேலும் அவரது பாலியல் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாமல் முத்துலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி சென்னையில் தற்கொலை செய்துகொள்ள விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது .
இதனை அறிந்த அவரது பெற்றோர் சென்னைக்கு விரைந்து சென்றுள்ளனர் , மேலும் அவருக்கு சென்னையில் முதலுதவி வழங்கப்பட்டு பிறகு விழுப்புரம் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் முத்துலட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார் .
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்துலட்சுமி மரணத்திற்கு காரணமான அமுமுக நிர்வாகி கந்தனை உடனடியாக கைது செய்யும் படி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் முத்துலட்சுமி தானாக விஷத்தை அருந்தவில்லை என்றும் , குற்றவாளி கந்தான் தான் வலுக்கட்டாயமாக முத்துலட்சுமியை அருந்த வைத்தார் என்றும் வளவனுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளி கந்தன் இன்று காலை தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அமமுக கட்சி நிர்வாகியான கந்தன் வளவனுர் பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார் மேலும் அவருக்கு திருமணம் நடைபெற்று 1 மகள் மற்றும் இரன்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது .