டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி பேசியபோது அவரது கண்முன்னே திடீரென ஒருவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அதன்பிறகு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். அந்த மாநாட்டை முடித்த பிறகு நேற்று பிரதமர் மோடி கிரீஸ் நாட்டுக்கு சென்றார். ஒரு நாள் கிரீஸ் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி நேரடியாக இன்று காலையில் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்க வந்திறங்கினார்.
சந்திரயான் – 3 திட்டம் மூலம் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதித்தது. அதன்பிறகு இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்த்த வாழ்த்தினார்.
இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்தும் நோக்கில் பிரதமர் மோடி கிரீஸ் நாட்டில் இருந்து நேரடியாக பெங்களூர் சென்றார். பெங்களூர் பீனியா பகுதியில் உள்ள இஸ்ரோவில் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் மோடி சந்திரயான் -3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
பெங்களூரில் இருந்து விமானத்தில் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறங்கிய பிறகு தென்ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணம் மற்றும் பெங்களூர் விசிட் குறித்து விமான நிலையத்தின் அருகே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்த ஒருவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி சட்டென தனது பேச்சை உடனடியாக பாதியில் நிறுத்தினார். மேலும் தனது மருத்துவ குழுவில் உள்ள டாக்டரை அழைத்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த நபரை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளியுங்கள். அவரது காலில் இருக்கும் ஷூவை கழற்றுங்குள் என கூறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் மோடியின் மருத்துவக்குழு டாக்டர் அந்த நபருக்கு சிகிச்சை வழங்கினார். அவர் தற்போது நலமாக உள்ளார். முதற்கட்ட விசாரணையில் கடும் வெயில் காரணமாக அவர் மயங்கி கீழே விழுந்தது தெரியவந்தது. பிரதமர் மோடியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.
இதையடுத்து தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‛‛தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நான் பங்கேற்றேன். மேலும் சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நான் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோது சந்திரயான்- 3 வெற்றிக்காக நிறைய வாழ்த்து செய்திகள் வந்தன” என்றார்.