- சொத்து வரி செலுத்தவில்லை என கூறி மாநகராட்சி தனது நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற உத்தரவிட கோரி மனு தாக்கல்.
தமிழ்நாடு நகர்ப்புற சட்டத்தில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பின், குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே சொத்து வரியை வசூல் செய்ய முடியும் – நீதிபதி.இவ்வாறு சட்டத்தில் உள்ள நிலையில், கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க மதுரை மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை.- நீதிபதி.மாநகராட்சியின் இந்த செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது.- நீதிபதி கருத்து.

தனியார் நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சில் மாலை 6 மணிக்குள் அகற்ற மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.மதுரை சேர்ந்த பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு.எங்களுக்கு சொந்தமான நிறுவனம் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பெயின்ட் கம்பெனி அமைத்து நடத்தி வருகின்றோம்.
எங்கள் நிறுவனம் 2023 நிதியாண்டு வரை சொத்து வரி மதுரை மாநகராட்சிக்கு கட்டி உள்ள நிலையில், பிளாஸ்டிக் சீட் கொண்ட தற்காலிக கட்டுமானத்திற்கும், சென்ற நிதி ஆண்டிற்கும் தற்போது நிதியாண்டிற்கும் சேர்த்து 20 இலட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டது.இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு எங்களது நிறுவனம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாமல் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி ஆணையர் இன்று06-11-24 காலை 7 மணிக்கு வந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து விட்டு சென்று விட்டார்.
எனவே மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தடை செய்து எங்கள் நிறுவனத்தின் சீலை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவசர வழக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதி குமரேஷ் பாபு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருன் சுவாமிநாதன் ஆஜராகி சொத்து வரி செலுத்தவில்லை என்பதற்காக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை கிடையாது இது சட்டவிரோத செயல் எனவே உடலை சீல் அகற்ற உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி.. தமிழ்நாடு நகர்ப்புற சட்டத்தில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பின், குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே சொத்து வரியை வசூல் செய்ய முடியும் இவ்வாறுதான் சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க மதுரை மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/chennai-special-court-acquits-teenager-arrested-for-smuggling-ganja-to-sell-to-college-students/
எனவே மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சரியில்லை என அதிருப்தியை பதிவு செய்த்தார் , மேலும் இன்று மாலை 6 மணிக்குள் வைக்கப்பட்ட சீலை அகற்றிட உத்தரவிட்டு, மனுதாரரை சொத்து வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சென்று உரிய பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.