2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், பாஜக கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், மாறி மாறி வெற்றி வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Indian National Democratic Inclusive Alliance- இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்பதை INDIA என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அந்த போஸ்டரில் “2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல…” என்ற வாசகங்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.