வனவிலங்குகள் பெரும்பாலும் மக்கள் வாழ்கிற பகுதிகளுக்கு வருவதில்லை என்றாள் சமூகவிரோதிகள் சிலர் அவைகளுக்கு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்கிற அச்சம். பெரும்பாலும் தற்போது வனவிலங்குகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வனப்பகுதிக்குள்ளே கிடைப்பதில்லை.
அங்குள்ள காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சமீப காலமாக வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். கோவை பகுதியில் ஒரு யானை இப்போது வரை சுற்றி திரிவதை நாம் அறிந்திருக்கிறோம்.
அதுபோல நீலகிரி மாவட்டம் கெத்தை அருகே உள்ள பரளிக்காடு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை குளிக்க தண்ணீர் இல்லாததால் வெப்பம் தாங்க முடியாமல் சேற்று குளியல் போட்டு உடம்பு முழுவதும் சேற்றை வாரி அப்பிக் கொண்டது. இதனை மின்வாரிய குடியிருப்பு வாசிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். யானை அப்பகுதியில் சுற்றி திரிவதால் அச்சம் அடைந்துள்ளனர்.