கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் கேரள மாநில காவல் துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த கேரள அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் எஸ்வந்த் (58) என்பவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை சோதனை சாவடி அறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
சட்டை மற்றும் வேட்டிக்குள் பல லட்ச ரூபாயை கட்டுக் கட்டுகளாக, சிறிய பாக்கெட்டுகள் போல தைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் ₹24,78,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் எதற்காக பணத்தை எடுத்து வந்தார் என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்வந்த் பணத்தை எடுத்து வந்த போது சோதனை சாவடிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது