டெல்லி-மும்பை விமானத்தில் பெண் டாக்டருக்கு புதன்கிழமை அன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக 47 வயது பேராசிரியரை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர் .
டெல்லியில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் பாதிக்கப்பட்ட 24 வயது பெண் டாக்டர் மற்றும் அந்த பேராசிரியர் அருகருகே அமர்ந்திருந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் தனக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பெண் மருத்துவர் மற்றும் பேராசிரியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் விமான ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார் .
இதன் அடிப்படையில் விமான ஊழியர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர் . மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பெண் சஹார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் .
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் .
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் அவருக்கு நீதிமன்ற ஜாமீன் வழங்கப்பட்டது . இந்த புகாரின் உண்மை தன்மையை அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .