- கோவையில் மாணவர்கள் தங்கும் அறை, வீடுகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை : கஞ்சா, போதைப் பொருள்கள் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்த காவல் துறையினர்..
கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறி வைத்து போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகள் சிறப்பு தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன் பெயரில் 400 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனைகள் ஈடுபட்டனர்.இந்நிலையில் இந்த மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு காவல் துறையினர் சென்று ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர்.
இதில் சில மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொடுப்பதற்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து காவல் துறை நடத்திய சோதனையில் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-issue-of-registration-of-barren-land-without-any-documents-to-individuals-case-in-madras-high-court/
மேலும் அவற்றை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அந்த வீடுகளில் இருந்த மாணவர்கள் 6 பேரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு போதைப் பொருட்களை சப்பளை செய்த நபரையும், காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.