நடிகர் தனுஷ் – தொடர் ஷெட்யூல்ஸ்.! 4 மாதம் வரை ரொம்ப பிசி.!

0
134
நடிகர் தனுஷ் - தொடர் ஷெட்யூல்ஸ்

ப.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி வரும் படம் டி50. சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. டி50 படத்திற்காக சுமார் 500 வீடுகள் கட்டியிருக்கிறார்கள்.
கால, நேரம் பார்க்காமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு இரவும், பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் தனுஷ். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். அதுவரை இரவும், பகலும் பிரேக்கே இல்லாமல் வேலை செய்யப் போகிறாராம். டி50 படத்தில் தன் குருவும், அண்ணனுமான செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். டி50 படத்தை இயக்குவதுடன் அதில் நடிக்கவும் செய்கிறார் தனுஷ். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடி யார் என்பது இதுவரை தெரியவில்லை.

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. காளிதாஸுக்கு ஜோடியாக அனிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ப.பாண்டியை போன்றே டி50 படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் பிறந்தநாள் அன்று டி50 படத்தின் தலைப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தலைப்பை வெளியடவில்லை. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்த கையோடு டி50 பட வேலையை துவங்கிவிட்டார் தனுஷ்.

டி50 படத்தை முடித்துவிட்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். தன்னை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் இயக்கி வரும் டி50 படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. தேரே இஷ்க் மெய்ன் படத்தை அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா பட வேலையை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்தில் நடிப்பதுடன் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.
கர்ணனை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இது எல்லாம் சரி, கேப்டன் மில்லர் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறதே. அது குறித்து தனுஷோ, அருண் மாதேஸ்வரனோ ஏதோவது சொன்னால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். கோலிவுட்டின் பிசியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் என்று நினைத்தால் தனுஷும் அப்படித் தான் இருக்கிறாரே என்கிறார்கள் ரசிகர்கள். தனுஷ் நடிக்கவிருக்கும் தேரே இஷ்க் மெய்ன் இந்தி படத்தில் முன்னதாக விக்கி கௌஷல் நடிக்கவிருந்தாராம். ஆனால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு தனுஷுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனந்த் எல். ராய் தனுஷை தன் சொந்த தம்பியாக பார்க்கிறார். அதனால் தனுஷ் எப்பொழுது மும்பை வந்தாலும் தன் வீட்டில் தான் தங்க வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here