சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். அதில் இயக்குனர் மற்றும் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது. அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன்.
என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.
சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டயபடுத்தியும் நிற்பந்தபடுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி உள்ளார். இது தொடர்பாக நேற்று விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். நேற்று போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார். முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார்.