அதிமுக கூட்டணி விரிசல் அண்ணாமலை பேச்சு தான் காரணமா?

0
209
அதிமுக பிஜேபி

அதிமுக பாரதிய ஜனதா கட்சி கூட்டணி விரிசலுக்கு அண்ணாமலை பேச்சு ஒரு காரணமா என்றால் இல்லை. பாஜக தலைமையில் எடப்பாடி நடத்திய பேச்சு வார்த்தை தான் காரணம் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 20 சீட்டுகளை பாஜக ஒதுக்க கூறியது தான் விரிசலுக்கு காரணம்.
அண்ணாமலை நடை பயணத்தால் பூரித்துப்போன பாஜக அடுத்த தேர்தலில் அதிக சீட்டுகளை பெற்று வெற்றி அடைந்து விடலாம் என கனவு கண்டது. அதன் வெளிப்பாடு தான் எடப்பாடி உடனான கூட்டணி பேச்சு வார்த்தை.
பேச்சு வார்த்தை சுகமாக நடைபெறாததால் கூட்டணி விலக்கு எடப்பாடி அறிவிக்காமல் சிபி சண்முகம்,டி.ஜெயக்குமாரை வைத்து அறிவிப்பு நடத்தினார்.
1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில், பசும்பொன் முத்துராமலிங் தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை, மிக கடுமையாக சாடியிருந்தார். அது அண்ணாவுக்கும் முத்துராமலிங்க தேவருக்கு இடையே நடைபெற்றது. அதை திரித்து அண்ணாமலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருக்கிறது.
அதிமுக விலகியதைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை, பாஜகவின் இன்னொரு முகம் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, பாமக மற்றும் உதிரி கட்சிகளை கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்கிற கனவுதான். கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்கலாம் என்றும் இதனால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும் என்கிற நினைப்பு தான் பாஜகவிற்கு இப்போதும் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக, திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஒரு வகையில் அது வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. திமுகவின் மீது உள்ள அதிருப்திகளை வாக்குகளாக மாற்றும் வேலையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அது ஒரு வகையில் சாத்தியமாக கூட அமையலாம்.
அண்ணாமலை பேச்சும் அதிமுக விரிசலும் தற்காலிகமாக கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு 2024 துவக்கத்தில் இதுவெல்லாம் வெளிப்படும்.

ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here