சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டங்கள் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையம், இரயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாசா வேலை தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை, 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம்,கோவை உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மோப்பநாய் உதவியுடன், பயணிகளின் உடமைகள் தீவிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், வெளியூர் செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்த பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவியின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ரயில்களில் ஏறிய போலீசார் வெடிகுண்டு இருப்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சரக்கு போக்குவரத்து பிரிவில் இருந்த சரக்குகளும் சோதனை செய்யப்பட்டது.
இதனால்,ரயில்வே ஸ்டேஷன்களில் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.