கஞ்சா – மது , தங்குதடையின்றி கிடைப்பது தான் திமுக வின் சாதனை – சி வி சண்முகம்

0
96
படுகொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜா அவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியும் அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை நிவாரணமாக வழங்கினார்

படுகொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜா அவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியும் அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை நிவாரணமாக வழங்கினார் 

விழுப்புரம் நகரில் கடந்த 29ஆம் தேதி அன்று குடிபோதையில் இருந்த சகோதரர்களால் இப்ராஹிம் ராஜா என்கிற நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது .

இது தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான சிவி சண்முகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜா அவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியும் அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை நிவாரணமாக வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் அவர்கள் : தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றது இதனை அதிமுக பல தருணங்களில் சுட்டிக்காட்டி வருகிறது தமிழகத்தில் போதைப் பொருட்களின் விற்பனையானது தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது

படுகொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜா

காவல்துறை முற்றிலுமாக செயல் இழந்து இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒரு அங்கமாக காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு தவறி இருக்கிறது.

காவல் துறையின் இத்தகைய செயல்களை பலமுறை எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆளுநர் இடத்திலும் பொதுவெளியில் இத்தகைய குற்ற சாட்டுகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் குறிப்பாக 24 மணி நேரமும் டாஸ்மார்க் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 24 மணி நேரமும் தமிழகத்தில் இருக்கிற அனைத்து பள்ளி கல்லூரிகளின் வாசலிலும் அனைத்து மக்கள் கூடும் பொது இடங்களிலும் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனையாகிக் கொண்டிருக்கிறது .

இந்தியாவிலேயே தான் சிறந்த முதலமைச்சர் என்று கூறிக் கொள்ளும் மு க ஸ்டாலின் அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவது தான் .

கஞ்சா விற்பனை தமிழக முழுவதும் நடைபெற்று வருவதை நாங்கள் சுட்டிக் காட்டுவதை நாங்கள் ஏதோ எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை திணிக்கிறோம். என்கிற தோணியில் அவர் மேற்கோள் காட்டி வருகிறார் ஆனால் தமிழகத்தில் கஞ்சா விற்பனை வெகு விமர்சையாக நடைபெற்று வருவது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரிந்த உண்மை .

சி வி சண்முகம்

கஞ்சா விற்பனையால் ஆளுங்கட்சியை சேர்ந்த குடும்பங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பல்வேறு காலகட்டங்களில் நான் சொல்லி வருகின்றேன் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே கஞ்சா விற்பனை எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது . விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை தூங்கி வருகிறது 10 நாட்களுக்கு முன்னர் வளவனூர் நகரில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை அடித்து உதைத்து அவருடைய சொத்தை எழுதி தருமாறு போதை ஆசாமிகளை  அனுப்பி மிரட்டி இருக்கிறார் .

மேலும் விக்கிரவாண்டி அருகே ஒரு பெண்ணும், ஆணும் பேசிக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்த மது பிரியர்கள் அந்த ஆணை அடித்து விட்டு அப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது காவல்துறை இதற்கான உடனடி நடவடிக்கை என்ன தான் மேற்கொண்டு வருகிறது என்பது தெரியவில்லை குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை , மேலும் விக்கிரவாண்டி ராதாபுரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் .

இப்படி தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையால் மது போதையால் மிகப்பெரிய குற்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வியாபாரிகள் நிம்மதியாக தங்களுடைய தொழில்களை செய்ய முடியவில்லை பள்ளி கல்லூரி மாணவர்கள் நிம்மதியாக வீட்டிற்கு வர முடியவில்லை. இளம் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது .

இந்நிலையில் நேற்றைய முன்தினம் அண்ணன் தம்பிகள் இருவரும் கஞ்சா போதையில் ஒரு பெண்ணை தாக்கி உள்ளனர் அதனை தடுக்க சென்ற  இப்ராஹிம் ராஜா என்கிற நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் . இதன் பின்னணி என்னவென்றால் அவர்கள் இருவரும் கஞ்சா போதையில் இத்தகைய செயலை செய்துள்ளனர் .

மேற்கண்ட இரண்டு இளைஞர்களும் நேற்றைய முன்தினம் கஞ்சா போதையில் மாலை 4 மணி முதல் விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர் , ஆனால் இதனை சட்டமன்றத்தில் எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியதின் பெயரில் தமிழக முதல் ஏதோ இது ஒரு குடும்பச் சண்டை என விளக்கம் அளித்துள்ளார் இதுதான் குடும்ப சண்டையா . மேலும் மேற்கண்ட அந்த இரண்டு நபர்கள் நான்கு முப்பது மணி அளவில் புண்ணியகோடி என்பவரையும் மீதும் தாக்குதல் நடத்துனர் .

அதன் பிறகு தீபக் என்பவரின் முகம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் மேற்கண்ட புண்ணியகோடி மற்றும் தீபக் ஆகிய அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை முதல் குற்ற பிரிவு  இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை .

மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் எம்ஜி ரோடு பகுதியில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீதும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் அதன் பின்னரே ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட இப்ராஹிம் அவர்களை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர் .  இந்த இரண்டு நபர்கள் நான்கு மணி முதலில் தகராறு செய்து வருகின்றனர் என்கிற தகவல் காவல்துறைக்கு தெரிந்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை .

மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் திமுகவின் தீவிர உறுப்பினர்கள் அவர்கள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் முதல்வரின் படத்தை போட்டுக் கொண்டிருந்தனர் ஆதலால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்க முடியவில்லை . தமிழக காவல்துறை ஒரு திறமையான காவல்துறை ஆனால் திறமையற்ற முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் வந்ததால் தற்பொழுது திறமையற்ற காவல்துறையாக தமிழக காவல்துறை திகழ்கிறது எனக் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here