அதிமுக தென் மண்டல முக்கியப் புள்ளி திமுக பக்கம் சாய்கிறாரா.?

0
109
ஸ்டாலின் எடப்பாடி

ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் திமுக சார்பாக நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்தார். தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களை – இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது.

ஸ்டாலின்

‌திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன்.வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!, என்று கூட்டத்தில் பேசினார்.

பொதுவாகவே லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலரும் கட்சி மாறுவது வழக்கம். பலரும் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு, பெரும்பாலும் ஆளும் கட்சி செல்வது வழக்கம். அந்த வகையில் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மண்டலத்தை சேர்ந்த புள்ளி அவர். அவர் மீது சில வழக்குகளும் உள்ளன. இந்த முறை லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் மண்டலத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேருடன் சேர்ந்து இவர் திமுகவில் இணைய உள்ளாராம். இதற்கான இணைப்பு விழா விரைவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள். இவர் மாறும் பட்சத்தில் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு இருக்க கூடிய அஸ்திவாரமும் காலி ஆகும் என்கிறார்கள்.

ஸ்டாலின்

இந்த நிலையில்தான் ஆளும் திமுக சார்பாக பணிகள் செய்வதற்கு முன் ஒரு லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த நபர்களின் செல்வாக்கை உளவுத்துறை மூலம் அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமங்கள்தோறும் திமுக கொடி கம்பங்கள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் இணைய வசதியுடன் கலைஞர் படிப்பகங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்தனர். இந்த பணிகள் ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் திமுக தரப்பு லோக்சபா தேர்தலுக்கும் தயாராக உள்ளதாம்.

அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துள்ளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை. லோக்சபா தேர்தலுக்கு உட்கட்சி சர்வே எடுக்க வேண்டும். எம்பிக்கள் செயல்பாடு எப்படி உள்ளது. யாரை மீண்டும் நிற்க வைக்கலாம். புதியவர்கள் தேவையா? ஏற்கனவே இருப்பவர்களை மீண்டும் களமிறக்கலாமா என்றும் கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக 10 புதிய முகங்களை தேர்தலுக்கு களமிறக்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here