அம்பானியின் திட்டம்! சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர்.. ம …

The News Collect
2 Min Read
  • மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி நிர்வாகிகள் தரமான இந்திய ஸ்பின்னர்களை வாங்குவதில் தான் குறியாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் அல்லது சாஹல் இருவரையும் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருக்கின்றனர். மும்பை அணியின் கைகளில் ஒரேயொரு ஆர்டிஎம் கார்டு இருந்தாலும், அந்த அணியால் அதனை அன்-கேப்ட் வீரருக்காக மட்டும் பயன்படுத்த முடியும்.

- Advertisement -
Ad imageAd image

2020ஆம் ஆண்டுக்கு பின் கோப்பையை வெல்ல முடியாமல் மும்பை அணி தவித்து வரும் நிலையில், மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான மோதல் போக்கையும் மும்பை அணி நிர்வாகம் முடித்து வைத்துள்ளது. இதனால் மும்பை அணிக்குள் எந்த பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

இதனிடையே ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை அணியை பொறுத்தவரை விக்கெட் கீப்பர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் தேவையாக இருக்கின்றனர். இவர்கள் வாங்குவதில் தான் மும்பை அணி குறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மும்பை அணியின் குறி இம்முறை சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை வாங்க தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இருவரும் ரூ.9 கோடி முதல் ரூ.11 கோடி வரை செல்வார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்கெட் கீப்பராக ஜாஸ் பட்லர், டி காக், பில் சால்ட், பென் டக்கெட் என்று ஏராளமான வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்பதால், மும்பை அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது.

கொஞ்சம் இதையும் படிங்க :   https://www.thenewscollect.com/how-much-is-the-property-of-donald-trump-who-is-one-of-the-richest-people-in-the-world/

அதேபோல் இந்திய விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மாவை வாங்க மும்பை அணி ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் கைவசம் ரூ.45 கோடி மட்டுமே இருப்பதால், 2 வீரர்களுக்கு மட்டுமே அதிக தொகை கொடுக்க முடியும் நிலை உருவாகி உள்ளது. இதனால் போல்ட், ஸ்டார்க் உள்ளிட்டோரை வாங்க வாய்ப்பே இல்லை. அதற்கு மாறாக ஹேசல்வுட், மேட் ஹென்றி, சாம் கரண் உள்ளிட்டோரை வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்ப்ரீத் சிங் பரார், ஷாம்ஸ் முலானி உள்ளிட்ட ஸ்பின்னர்களையும் மும்பை அணி வாங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இஷான் கிஷனை மீண்டும் வாங்க முயற்சித்தாலும், மற்ற அணிகள் அவரை வாங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

 

Share This Article
Leave a review