- அம்பாசமுத்திரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில்
மாஞ்சோலை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை – மஞ்சோலை மக்களின் அத்தியாவாசி தேவையான மருத்துவம், குடிநீர்,மின்சாரம், பேருந்து உள்ளிட்டவை செய்து தர கோரிக்கை.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சுமார் நான்கு தலைமுறைகளாக தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே கடந்த ஜீன் மாதம் அங்கு இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது.
தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இருப்பினும் சுமார் 5 மாதத்திற்கு மேலாக அங்குள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி, மருத்துவம், பேருந்து வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்றம், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வருகிற 11 -ந் தேதி மாஞ்சோலை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடந்த முடிவு செய்தனர்.
இதுகுறித்து இன்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அம்பாசமுத்திரம் தாசில்தார் காஜா நவாஸ் தலைமையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/dead-body-of-elderly-woman-in-suitcase-in-meenjur-railway-station-2-arrested/
அப்போது மாஞ்சோலைக்கு பகுதிக்கு இயங்கி வந்த இரண்டு பேருந்தை மீண்டும் இயங்கா வேண்டும், சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதற்கு வயர்மேன் வேண்டும் மற்றும் தற்போது மழைக்காலம் என்பதால் மாஞ்சோலை மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.