கடுமையான இதய குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட 83 வயது முதியவருக்கு, பைபாஸ் அறுவை சிகிச்சையை தவிர்த்து , ஸ்டண்ட் பொருத்தாமல், ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இதய குழாய் அடைப்பை நீக்கி தஞ்சை தனியார் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர் . இந்த புதிய நவீன தொழில்நுட்பம் தஞ்சைக்கும் வந்து விட்டது என்றும் , இதனால் பல இதய நோயாளிகள் பயன் பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மருத்துவமனை மருத்துவர்கள்:
தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் வழக்கமாக இதய தமனிகளில் உருவாகும் அடைப்புகளுக்கு ஒபன் ஹார்ட் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கும் நிலை தான் இருந்து வந்தது .

இந்நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 83 வயதுடைய முதியவர் ராமநாதனுக்கு என்பவருக்கு இதய குழாயில் கடுமையாக இருந்த அடைப்டை அகற்றுவதற்கு நவீன தொழில்நுட்பமான ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அடைப்புகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர்மென்னாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் .
இதய குழாயில் இருக்கும் அடைப்பு காரணமாக ராமநாதன் என்ற 83 வயது முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் .
அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் , ராமநாதனுக்கு இதய குழாயில் அதிகளவு அடைப்பு இருப்பதை பரிசோதனையில் கண்டுபிடித்தனர் .

மேலும் அவரது வயது மூப்பை கருத்தில் கொண்ட மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் , மிகக்குறைவான ஊடுருவல் கொண்ட ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் அவரது இதய குழாய் அடைப்புகளை சேரி செய்ய முடிவு செய்து ராமநாதனின் குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்றனர் .
இதற்காக அவர்களது மருத்துவமனையின் மூத்த இதய நோய் வல்லுநர் கேசவமூர்த்தி அவர்கள் ஆஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சை முறை மூலம் அடைப்புகளை ஒருமணி நேரத்திலேயே நீக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளனர் .
இதனால் சிகிச்சை முடிந்த அடுத்த இரண்டு மணி நேரத்திலே முதியவர் ராமநாதன் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் . வயது மூப்படைந்தவர்களுக்கு இந்த நவீன தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளது என்றும் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் கேசவமூர்த்தி தெரிவித்தார் . மேலும் இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முதியவர்களுக்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்தார் .