பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோ வில் கைது

0
133
பாலியல் பலாத்காரம்

ஜெயங்கொண்டம் அருகே பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் சொன்னால். சிறுமியை பற்றி தவறாக பலரிடம் கூறி அசிங்கப்படுத்தி விடுவதாக சிறுமிக்கு மிரட்டல் விடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைதுசிறுமி கர்ப்பமானதால் அம்பலம்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், பூப்பறிக்க வேலைக்கு வரும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலை மாற்றம் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது,  அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பலாத்காரம் செய்ததாகவும்,  வெளியே சொன்னால் பலரிடம் கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும் மேலும் கொலை செய்து விடுவதாக  மிரட்டியதாகவும்  சிறுமி தெரிவித்துள்ளார்.‌‌

மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, காந்தி மீது வழக்குப்பதிந்து, அவரை  கைது செய்து விசாரித்து வருகிறார்.‌‌இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here