மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பவானி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அங்காளம்மன்.கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.ஆடி மாத அமாவாசையான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் உற்சவர் அங்காளம்மன் பவானி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று நள்ளிரவு பவானி அலங்காரத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மன் வடக்கு வாயில் வழியாக பூசாரியில் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.
அப்போது பக்தி பரவசமடைந்த பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா என பக்தி பரவசமடைந்து சில பக்தர்கள் நடனமும் ஆடினர்.உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சித்ராவிஜயன்,சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆடி மாத அமாவாசை என்பதால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருக்கோவிலுக்கு வந்து செல்ல பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையிலான 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம்,கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார் அறங்காவலர்கள் சந்தானம் ,தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், மற்றும் கண்காணிப்பாளர் வேலு ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் மணி, மற்றும் சதீஷ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பணிகளை செய்தனர்.