அன்னதானம் என்ற பெயரில் அராஜகம். இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக செயல்படும் அண்ணாமலை

0
153
வள்ளலார் மாளிகை

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது, வள்ளலார் அருள் மாளிகை சுத்த சன்மார்க்க அருள்மிகு இராமலிங்க சுவாமி மடம். சன்மார்க்க அன்பர்களால் தொடங்கப்பட்ட இந்த மடம் பசியாற்றும் விதமாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

உயிரையே நோக்கத்தோடு தொடங்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வந்த இந்த வள்ளலார் மடத்தில்  சில தனிநபர்கள் ஆகிரமித்து சுய லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடுவதாக சன்மார்க்க அன்பர்கள் கருதி இந்த வள்ளலார் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வழக்கும் தொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த மடம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அண்ணாமலை என்கிற தனிநபர் இந்த மடத்தை கையகப்படுத்தும் நோக்கத்தோடு அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தும் இருந்தார். உயர்நீதிமன்றம் இந்த ராமலிங்க சுவாமி மடம் இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் தான் இயங்கும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 11- 07 -2023ஆம் தேதியிலிருந்து இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவரப்பட்டது ராமலிங்க சுவாமி மடம்.
அன்றிலிருந்து மூன்று வேலைகளும் இந்த மடத்தில் ஏழை மக்களுக்கு பசியாற்றும் விதமாக உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தோடு அண்ணாமலை என்கிற தனி நபர் ராமலிங்க சுவாமி மடத்திற்கு அருகில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்து இராமலிங்க சுவாமி பெயரில் அன்னதானம் வழங்கி வருவதோடு இந்து சமய அறநிலையத்துறை மீது பல்வேறு அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு பதாகைகளும் கட்டி வருகிறார்.

இது தொடர்பாக செயல் அலுவலர் மதனா வாசுதேவன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த புகாரில் அவர் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அண்ணாமலை சமூக வலைதளங்களில் நன்கொடை என்கிற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சன்மார்க்க அன்பர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒரு அமைப்பை இது போன்ற சுயலாபத்திற்காக களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிற தனிநபர்கள் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அதிலிருந்து இது போன்ற மடங்கள் செயல் இழக்க செய்கிற நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here