வாசல் தெளித்து கோலம் போடுபவரா நீங்கள்.? வாஸ்து டிப்ஸ் ஃபாலோ பன்னுங்க.!

0
110
கோலம்

நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் இறை சக்தியும் நிறைந்திருக்கும். வீட்டு வாசலை சுத்தமாக வைத்திருந்து தினம் வாசல் தெளித்து கோலம் போட்டால் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கோலம் போடுவதால் என்ன நன்மை என்று வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.

வீட்டு வாசலில் கோலம்:

நம்முடைய பாட்டியும் அம்மாவும் வீட்டு வாசலை சுத்தம் செய்து மாட்டு சாணம் சேர்த்து தண்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள்.
இன்றைய அவசர யுகத்தில் பெருமளவில் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் குறைந்து வருகிறது. வாரத்திற்கு ஒருநாளோ அல்லது வாரம் இருமுறையோதான் தண்ணீர் தெளித்து கோலம் போட முடிகிறது.

அதுவும் நினைத்தால்தான் செய்கின்றனர். இது தவறான பழக்கம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. வாஸ்துபடி வீட்டின் முன் தண்ணீரை தெளித்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி,
வீட்டில் உள்ள சூழல் தூய்மையாக இருக்கும். நம்முடைய தலைவாசலை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன்பாக குப்பைகள் இருந்தால் இறை அருள் இருக்காது.
எனவேதான் காலையிலும் மாலையிலும் நம்முடைய முன்னோர்கள் வீட்டு வாசலை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

மக்கள் சாணம் தெளிப்பது ஏன்?:

காலையில் எழுந்ததும் மாட்டு சாணத்தை கைகளில் எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டின் முன் தெளிப்பதால் வாசல் மட்டும் சுத்தமாவதில்லை. நம் விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கும். கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், நோய்கள் தீரும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். மகாலட்சுமியே வீட்டிற்கு வருவதால் மருத்துவ செலவுகள் குறைந்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

வீடு சுத்தமாக வேண்டும்:

நம்முடைய வீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருந்தால்தான் அன்னை மகாலட்சுமிக்கு பிடிக்கும். சுத்தமான வீட்டிலும் சண்டை சச்சரவு இல்லாத வீட்டிலும்தான் அன்னை மகாலட்சுமி தங்குவார். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நாம் நிலைவாசலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வணங்குவதும் மகாலட்சுமிக்கு பிடித்தமான அம்சமாகும்.


வீட்டின் உள்ளே எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதே போல வீட்டு வாசலையும் நாம் சுத்தமாக வைக்க வேண்டும் இதன் மூலம் எதிர்மறை சக்திகளின் ஆற்றல் குறைந்து நேர்மறை சக்திகளின் ஆற்றல் அதிகரிக்கும். தினமும் காலை மற்றும் மாலையில் அழகான கோலங்கள் போடுவதன் மூலம் மகாலட்சுமி தேவியை நம் வீட்டிற்குள் வரவேற்கலாம். புன்னகை வழியாக அவர் என்றும் நிலைத்திருப்பார்.

நேர்மறை ஆற்றல் கூடும்:

நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் அமைதியும் ஆனந்தமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வீட்டில் மன நிம்மதி இருக்கும் மன நிம்மதி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள்.
அதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். சிலரது வீடுகளில் கண் திருஷ்டியால் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். நாம் வாசலில் கோலம் போடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் குடியேறுவது தடுக்கப்படும்.

பூமா தேவி மகிழ்ச்சி:

வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளிப்பதன் மூலம் அன்னை பூமாதேவியும் மகிழ்ச்சியடைவார். பூமாதேவியை மகிழ்ச்சியடைய செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் எந்த பிரச்சினையும் வராது. செவ்வாய் கிரகம் தொடர்பான தோஷங்கள் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. நவ கிரகங்களுக்கும் தனித்தனி கோலங்கள் உள்ளன. கோலத்தைப் பார்த்த உடன் தெய்வங்கள், அதிர்ஷ்ட தேவதைகள் உள்ளே வருவார்கள்.

அமாவாசை:

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கட்டாயம் கோலம் போடக் கூடாது காரணம் அன்றைய தினம் நமது முன்னோர்கள் வீடு தேடி வருவார்கள். நமது முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது.

ஆக இத்தனை சம்பிரதயாங்கள் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்துவிட்டுப் போக நாம் ஏன் பின்பற்றுவதர்க்கு தயங்க வேண்டும். இவற்றை பின் பற்றுவோம், குடும்ப நலன் காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here