சென்னை: 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்குக்கு மீண்டும் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டோக்கன் மிஸ் செய்த நபர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 வழங்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சாதாரணமாக எல்லோருக்கும் வழங்கிடாமல் முறையாக பயனாளிகளை கண்டுபிடித்து தேவையான நபர்களுக்கு மட்டும் நிதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. அதன் முடிவில் யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என்ற லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரம் முன்பு இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த விண்ணப்பங்களுடன் சேர்த்து கூடுதலாக டோக்கன் ஒன்றும் வழங்கப்பட்டது.
டோக்கன் ஏன்:
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் டோக்கனில் உள்ள தேதியில், முகாம் எங்கே உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தில் சென்று டோக்கனை காட்டி பின்னர் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இதற்காக ஆதார் கார்ட், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட போன் எடுத்து செல்லப்பட வேண்டும். முதல் கட்டமாக வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் விண்ணப்பத்தில் சிலருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்படாமல் விடுபட்டுள்ளது.
இதையடுத்து முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக
மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இதற்கான முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் கலைஞர் உரிமைத்தகைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.
மிஸ் ஆகிவிட்டதா?:
இந்த நிலையில் டோக்கன் மிஸ் செய்த நபர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் டோக்கன் உள்ள நாளில் செல்லாமல் இருந்தால் என்ன செய்வது என்ற விவரம் வெளியாகி உள்ளது. உதாரணமாக உங்களுக்கு இன்று முகாம் செல்ல வேண்டும் என்று டோக்கனில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இன்று நீங்கள் அவசர வேலை, மருத்துவ காரணம், அலுவலக காரணம் காரணமாக முகாம் செல்ல முடியவில்லை.
அதனால் உங்கள் டோக்கன் தேதியை மிஸ் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஒரு தீர்வை அரசு வைத்துள்ளது. நீங்கள் டோக்கன் தேதியில் செல்ல முடியாமல் போனால் மறுநாள் முகாமிற்கு செல்ல முடியும். மறுநாள் முகாமில் முதல் ஆளாக கூட்டம் அதிகம் இருந்தால் கடைசி ஆளாக உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். டோக்கன் நாளில் செல்ல தவறினால் கூட உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதில் தேவையற்ற கண்டிப்பு காட்ட கூடாது என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அடித்தட்டு மக்கள் சிலர் இந்த விவரங்கள் புரியாமல் தேதி மாறி வர வாய்ப்பு உள்ளது.அதனால் அவர்கள் செய்யும் தவறுகளை கனிவுடன் திருத்த வேண்டும். டோக்கன் நாளுக்கு முன்பே வந்தால் அவர்களிடம் டோக்கன் நாளை பற்றி விளக்க வேண்டும். டோக்கன் நாள் முடிந்து வந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.