அதிமுகவின் “புரட்சிகர” பட்டங்களை தொடரும் வகையில், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது .
அவர் இப்போது அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களான மறைந்த முதலமைச்சர்கள் (புரட்சி தலைவர்) எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் (புரட்சி தலைவி )ஜெ.ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து புரட்சி தமிழர் என்று அழைக்கப்படுவார் .
அதிமுக கட்சியிலிருந்து சமீபமாக வெளியேற்றப்பட்ட ஓ பன்னீர்செல்வத்துடனான அதிகார மோதலின் முடிவில் உயர்மட்ட தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மதுரையில் நடத்தப்பட்ட பிரமாண்ட மாநாட்டில் பழனிசாமிக்கு இந்த பட்டத்தை பல்வேறு மதங்களைச் சேர்ந்த குருக்கள் வழங்கியுள்ளனர் .
மாநாட்டில் கூடி இருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தங்கள் தலைவரின் ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டத்தை முழக்கமிட்ட சத்தம் காதுகளை பிளந்தது . எடப்பாடி பழனிச்சாமி மார்ச் மாதம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, அ.தி.மு.க., தனது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில், கோவில் நகரமான மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடத்தி முடித்தது .
முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடத்தப்பட்ட 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாநாட்டுக்கு வருகைதந்த லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய அக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு உதவும் உண்மையான இயக்கம் அதிமுக கட்சி மட்டும் தான் என்று அவர் கூறினார்.
மாநிலத்தின் முக்கிய பிரச்சனையான நீட் தேர்வு குறித்து பேசிய பழனிசாமி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சர்ச்சைக்குரிய தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது, அதில் திமுக ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று பழனிசாமி கூறினார்.
நீட் தேர்வு குறித்து அதிமுகவை குறிவைத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பழனிசாமி இவ்வாறு பேசினார் .
நீட் தேர்வு ஒழிக்கக் கோரி திமுக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது ஒரு நாடகம் என்று அவர் தெரிவித்தார் .
தனது உரையில் மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம் என்று திமுக தலைவர்களான ஸ்டாலின்மற்றும் உதயநிதி ஆகியோரிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மதுரை மாநாட்டில் நீட் எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுகவுக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்திய மருத்துவ கவுன்சில் 2010ல் நீட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது என பேசிய பழனிசாமி , அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது என்றார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், திமுகவின் எஸ் காந்திசெல்வன் அவருக்கு இளையவராகவும் இருந்ததாக பழனிசாமி கூறினார்.
“காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. இது பதிவில் உள்ளது; மறைக்க முடியாது. இது (திமுகவால்) மறைக்கப்பட்டது. நீட் தேர்வு காங்கிரஸும், திமுகவும் கொண்டு வந்தது” என்றார்.
திமுக வால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட உண்ணாவிரதம் ஒரு பெரிய நாடகம். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தான் போடப்படும் என்ற ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதியை பழனிசாமி நினைவுகூர்ந்தார் .
திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றது அவர்கள் இதுவரை என்ன செய்து இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.