அதிராம்பட்டினம் : கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் மீன்பி …

The News Collect
2 Min Read
  • அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் கடல் பசு சிக்கியது – வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் நல்ல  நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்கள்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது.

- Advertisement -
Ad imageAd image

உடனே அந்த கடல் பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வனவர் கீழத்தோட்டத்திற்கு விரைந்து சென்று மீனவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் நல்ல நிலையில் கடலுக்குள் கடல் பசுவை விட்டனர்.

கடல் பசு (ஒலிப்பு) என்பது கடலில் மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களைத்தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும். மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால் சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கின்றனர்.

தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது. 3 மீட்டர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத்தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.இது நீர்நிலைகளில் உள்ள தாவங்களை மட்டுமே தின்று வாழ்பவை. நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும்.

கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு ஆகும். கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம்.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/the-1039th-sadaya-festival-started-with-a-bang-yesterday-on-behalf-of-the-government/

கடல் பசு இறைச்சிக்காகவும், தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட். அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். கடல் பசு பார்ப்பதற்கு டால்பின்கள் போல் இருந்தாலும் இவற்றிற்கு முதுகுத்துடுப்பு இல்லை, இதனால் இது தண்ணீருக்கு வெளியே தாவும் திறன் அற்றுள்ளது.

Share This Article
Leave a review