தமிழக – ஆந்திர எல்லை பகுதியில்ஆம்பூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகள்எட்டு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி கரடிகளை உயிருடன் மீட்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்
தமிழக – ஆந்திர எல்லை பகுதியில்ஆம்பூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகள்
எட்டு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி கரடிகளை உயிருடன் மீட்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் இவருக்கு தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியொட்டி விவசாய நிலம் உள்ளது.
இவரது விவசாய நிலத்தில் பயனற்று உள்ள கிணற்றில் இருந்து அதிக சத்தம் வருதாக அப்பகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்தவர்கள்
உடனடியாக விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றில் வனப்பகுதியில் இருந்து வந்த இரு கரடிகள் இருப்பது தெரியவந்தது.இந்த கரடிகள் தவறி விழுந்திருக்கலாம் என அறிந்த விவசாயி சிங்காரம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் அருகில் பள்ளம் தோண்டி பனைமரத்தை வேருடன் கிணற்றில் இறக்கினர். பின்னர் பனைமரத்தின் மீது ஏறி ஒரு கரடியை மேலே வந்த நிலையில்,
மற்றொரு கரடி மிகுந்து சோர்ந்து காணப்பட்ட நிலையில் பனைமரத்தில் ஏறமுடியாத நிலையில் அந்த கரடி இருந்தது. அக்கரடியினை பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கயிறு கட்டி மேலே இழுத்தனர்,
பின்னர் இரு கரடிகளும் காட்டுப்பகுதியிற்கு கொண்டு சென்று விட்டனர்,
மேலும் இந்த இரு கரடிகளும் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த இரு கரடிகள் மீட்கப்பட்டது.