காஞ்சிபுரத்தில் பைக்ரேஸ் பந்தயம்.! 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

0
114
3 வயது சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் பைக்ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ற 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டு கோட்டையில் பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான ரேஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் ரேஸ் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் சார்பில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பைக் ரேஸ் போட்டி நடைபெற்றது. இந்த ரேஸ் போட்டியில் பெங்களூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஸ் பங்கேற்று இருந்தார். தனது பிரிவுக்கான போட்டியில் 3-வது சுற்று ரேஸ் துவங்கியதும் பைக்குகள் சீறிப்பாய்ந்தன. அப்போது வளைவு ஒன்றில் திரும்பும் போது ஸ்ரேயாஸ் ஹரிஷ் ஓட்டிய பைக் சறுக்கியது. இதில் நிலை தாடுமாறி ஹரிஷ் கீழே விழுந்தார். இதில் ஹரிஷ் அணிந்து இருந்த ஹெல்மெட்டும் கழன்று விழுந்ததாக தெரிகிறது. பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பிற பைக்குகளும் அவர் மீது ஏறி இறங்கியதாக சொல்லப்படுகிறது. இதில் தலையில் ஹரிஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவப்புக் கொடி காட்டப்பட்டு பந்தயம் நிறுத்தப்பட்டது.

ஹரிசை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே ஹரிஸ் பரிதாபாமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஷ், 2021 ஆம் ஆண்டு முதல் பைக் பந்தயத்தில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற மினி ஜிபி ரேஸ் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த MSBK Championship(250cc category) போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்று இருந்தார். பைக் ரேசர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12-வயதுக்கு மேற்பட்டவர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதற்கான லைசன்களை FMSCI வழங்குகிறது.

ரேஸ் டிரக்கில் இந்த லைசன்ஸ் பெற்ற சிறுவர்களும் பைக் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இந்த லைசன்சை கொண்டு சாலையில் பைக் ஓட்ட அனுமதி கிடையாது. பைக் ரேசின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13-வது சிறுவன் உயிரிழந்ததற்கு மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந் அஜித் தாமஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ” இது ஒரு சோகமான சம்பவம். திறமையான ஒரு இளம் வீரரை நாம் இழந்து விட்டோம். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here