பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை., கோவையில் இன்று திறப்பு.!

0
108
பயோ டைஜெஸ்டர் டேங்க்

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி) வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டது. மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான கழிவு நீரையும் பயோ சுத்திகரிப்பு முறையில் ஒரு நாளைக்கு 400 லிட்டர் அளவில் சுத்திகரிப்பு செய்து, அதிலிருந்து கிடைக்கபெறும் நீரை பூங்காக்களுக்கு, பயன்படுத்தும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.

சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மையத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அன்றாட பயன்பாட்டில் உருவாகும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி வரும் நிலையில்
அதற்கு தீர்வு காணும் வகையில் சுமார் 2.16 கோடி மதிப்பில் தமிழ்நாடு பொல்யூசன் கண்ட்ரோல் போர்டு மற்றும் டிஆர்டி.ஒ அனுமதி பெற்று மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான கழிவு நீரையும் சுத்திகரிக்கும் பயோ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு உருவாகும் பல்வேறு வகையான கழிவு நீர் பயோ சுத்திகரிப்பு முறையில் ஒரு நாளைக்கு 400 கிலோ லிட்டர் அளவில் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து கிடைக்கபெறும் நீரை சிஆர்பிஎப் வளாகத்தில் உள்ள மரங்கள், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் நுர்நாற்றம்  இல்லாமல் கழிவு நீர் 100 சதவிகிதம் சுத்திகரிப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதன் திறப்பு விழா  CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அஜய் பரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை CPWD மூத்த பொறியாளர் பவன் குமார் குப்தா, மேக் நிறுவன நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், CRPF கமாண்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here