வரலாற்றில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகித்தது உண்டு. அந்த வகையில் உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த அரசியல் திரைப்படமாக ஜவான் திகழ்ந்து வருகிறது.
புரட்சிகளை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களில் ஜவான் திரைப்படம் முதன்மை வகிக்கிறது என்று கூட சொல்லலாம். நாட்டின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பல திரைப்படங்கள் பேசி இருந்தாலும் கூட, பாஜக அரசை முழுமையாக தோலுரித்துக் காட்டக்கூடிய ஒரு திரைப்படமாக ஜவான் விளங்குகிறது.
விவசாயிகள் தற்கொலைகளை பல திரைப்படங்கள் படம் எடுத்து அவருடைய வாழ் நிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தாலும் கூட, ஜவான் திரைப்பட குழுவினர் மிக நேர்த்தியாக விவசாயிகள் பிரச்சினைகளை, விவசாயிகள் ஏமாற்றப்படுவதை, விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை அப்பட்டமாக ஆட்சியாளர்கள் ஆட்சி செய்வதை இந்த திரைப்படம் மிக நேர்த்தியாக விளக்கி இருக்கிறது.
அது மட்டுமல்ல அரசு மருத்துவ துறை சார்ந்த ஒரு அருமையான நேரடி பதிவை காட்சிப்படுத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கிற வாக்கு இயந்திரங்கள் தான் என்பதை முடிவு செய்து கதாநாயகன் சாருக்கான் வாக்கு இயந்திரங்களை கடத்தி அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் விதம் மிக அற்புதம். இதெல்லாம் வேறு எங்கோ நடந்தது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் தமிழ்நாட்டில் இந்தியாவில் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.
அப்படியானால் ஜவான் திரைப்படம் என்ன? சொல்லுகிறது.
அடுத்து வரும் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி என்பதை சொல்லுகிறது. மிகத் துணிச்சலாக அந்த படத்தில் பலர் பணியாற்றி இருக்கிறார்கள் குறிப்பாக ஷாருக்கான் நேரடியாகவே அரசுகள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பது எதார்த்தம். இந்த படத்தின் வெற்றி என்பது மக்களை சிந்திக்க வைத்திருப்பது மட்டுமல்லாமல் எதிர்வரும் தேர்தலில் இதற்கு காரணமான பாஜக ஆட்சி வீட்டுக்கு அனுப்புகிற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இனி பாஜக என்ன சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதற்கு ஜவான் திரைப்படம் ஒரு மாபெரும் உதாரணம்.
ஜோதி நரசிம்மன்
தி நியூஸ் கலெக்ட்
ஆசிரியர்