- இந்து மக்கள் கட்சி இளைஞரணியின் தலைவர் ஓம்கார் பாலாஜியின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாக நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, திமுகவை சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து ஓம்கார் பாலஜி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கோருவது தொடர்பாக கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது அப்போது ஓம்கார் பாலாஜி தரப்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது, அதில் உயர் நீதிமன்றத்தை தான் மதிப்பதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படி தான் மன்னிப்பு கோருவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இதனை படித்து பார்த்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவின் படி மன்னிப்பு கேட்பாதாக மனுவில் கூறியிருப்பதை நீக்கிவிட்டு, உங்களுடைய பதிலை மனுவில் திருத்தி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதனை ஏற்க மறுத்த ஓம்கார் பாலாஜி, மன்னிப்பு கேட்பது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.
காவல்துறை தரப்பில், பத்திரிக்கையாளரை மிரட்டும் வகையில் ஓம்கார் பாலாஜி பேசிய ஒலிப்பதிவு இருப்பதாகவும்,( நக்கீரன் கோபால் நாக்கை வெட்டிவேன்) தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ஓம்கார் பாலாஜி, முன் ஜாமீன் கோரிய வழக்கில், போலிசார் அவரை கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இல்லை என தெரிவித்து வழக்கின் விசாரணையை நவம்பர் 19 ம் தேதி தள்ளி வைத்தார்.
இந்து மக்கள் கட்சியின் தாய் அமைப்பான இந்து முன்னணி , ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தால் ( ஆர்எஸ்எஸ் ) தமிழ்நாட்டில் அதன் அரசியல் நடவடிக்கைகளுக்கான முன்னணியாக அமைக்கப்பட்டது .
இந்து முன்னணி அமைப்பு 1980 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான ராம கோபாலனால் நிறுவப்பட்டது , அதன் உருவாக்கம் முதல் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்பரிவார்களுக்கான தளமாக செயல்பட்டது.
இந்த அமைப்பு ஒரு இந்து வகுப்புவாத அடையாளத்தை ஊக்குவித்து, அதை ஒரு அரசியல் அணிதிரட்டல் உத்தியாகப் பயன்படுத்தியது. 1990 களின் முற்பகுதியில், திமுகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிர்வினையாக அதிமுக ஜெயலலிதா அரசு (1991-1996) இந்துத்துவா பக்கம் சாய்ந்தது .
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவதில் இந்து முன்னணியின் செயல்பாடுகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆதரவு அளித்தது. ராம கோபாலனின் நடவடிக்கைக்கு மாநில அரசின் ஆதரவு அவரை ஜெயலலிதாவின் சீடராக மாற்றியது .
இந்த நெருக்கத்தால், இந்து முன்னணியின் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று, 1993ல் எஸ்.வி.ஸ்ரீதர் தலைமையில், இந்து மக்கள் கட்சி என்ற மற்றொரு குழுவைக் கண்டுபிடித்தனர். இரு குழுக்களின் போராளிகளும் , முஸ்லிம்களுக்கு எதிராக, துஷ்பிரயோகம் மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினர்.
இஸ்லாம் மற்றும் முஹம்மதுக்கு எதிரான ஆத்திரமூட்டும் பேச்சுகள் அப்பகுதியின் சமூக சூழலை துருவப்படுத்தியது. அவர்களின் முஸ்லிம் விரோத பேச்சுகளும் செயல்பாடுகளும் அல் உம்மா என்ற முஸ்லிம் குழுவை உருவாக்க வழிவகுத்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/chief-minister-stalin-is-going-to-virudhunagar-today-2-day-tour-participation-in-vehicle-rally/
ஜெயலலிதா ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் தடையின்றி தொடர்ந்தன. அதிமுக உடனான பாஜக கூட்டணி ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழகத்தில் மேலும் பரவ வழிவகுத்தது. இந்த அமைப்புகள் தங்கள் பலத்தை ஒருங்கிணைத்து மத விழாக்களை பயன்படுத்தி கலவரங்களை ஏற்படுத்தினர்.