காஞ்சிபுரம் மாநகராட்சி பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை மீதி பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 60 வயது முதியவருடன் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 சிறுவன் ஒருவன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு இருவரும் மதுபானம் அருந்துவதை வழக்கப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் மதுபானம் அருந்த இருவரும் ஒன்று சேர்ந்த நிலையில், பிச்சைக்கார முதியவர் மதுபானத்தில் சிறுவனுக்கு பங்கு வழங்காமல் குடித்து உள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் கையில் வைத்திருந்த பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டான்.
கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவரின் உடலை கண்டு வழியே சென்றவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிச்சைக்கார முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிச்சைக்கார முதியவரை கொலை செய்துவிட்டு மறைவிடத்தில் பதுங்கி இருந்த சிறுவனை கண்டுபிடித்து கைது செய்தனர்.மேலும் சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபானத்தில் பங்கு வழங்காத பிச்சைக்கார முதியவரை, சிறுவன் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.