விதவிதமான விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விழிப்புணர்வு ஏற்படாத ஓட்டுநர்கள். தீவிர கண்காணிப்புகள் இருந்தும் தொடரும் விபத்துகள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன இந்த நிலையில் இன்று காலை கோவை மெயின் ரோட்டில் இருந்து மீனாட்சி மருத்துவமனை எதிரே உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அப்பொழுது,மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி சென்ற மினி ஆட்டோ ஒன்று வண்டியை முந்தி செல்லும்போது டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதினார் இதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை ஆகையால் தூக்கி எறியப்பட்டனர் இந்த காட்சி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து கேமராவில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.