பிளேயிங் லெவனில் மாற்றம்.! வாழ்வா-சாவா நிலை.! வானிலை கை-கொடுக்குமா.?

0
109
ரோகித் சர்மா

தரோபா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இந்திய அணி பலப் பரிட்சை நடத்துகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் கடைசி போட்டியில் வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்றும். இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒருமுறை கூட வெஸ்ட் இண்டீஸ்யிடம் ஒரு நாள் தொடரை இழந்தது இல்லை. இந்த சோகமான சாதனையை மாற்றும் நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் உள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது இந்திய அணிக்கு மைனஸ் பாயிண்டாக இருந்தது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் பிளேயிங்
லெவனில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளைய ஆட்டத்தில் யார் இடம் பெறுவார்? யார் அணியவிட்டு செல்வார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டதால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் அக்சர்பட்டேல் நீக்கப்பட்டு
ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் மிகவும் தோய்வாகவும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது. இதன் காரணமாக நாளை ஆட்டத்தில் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது தரோபாவில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் தடைப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன் இந்தியா விளையாடப் போகும் கடைசி ஒரு நாள் போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்க ரோகித் படை தயாராகி வருகிறது.இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் உம்ரான் மாலிக் தனது திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here