துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமார்

0
84
தலைமை காவலர் செல்வகுமார்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமார் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு

தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தலைமை காவலர் செல்வகுமார் பணியில் இருந்த போது  போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும்  68 வயது பெண் கையில் இருந்த கை பேக் பிடுங்கி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் முருக ப்பெருமாள் யிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வக்குமார்  தினமும் பணியின் போது மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது.  தொடர்ந்து.  68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வ குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு உத்தரவிட்டார்.

தூத்துக்குடியில் தலைமை காவலர் 68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here