- கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.கோவையில் 114 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை விமான நிலையத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக விமான மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் வந்து இறங்கினார். அவருக்கு வழிநெடுகிளும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் தொடர்ந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைக்க சென்றார். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தலங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய டைடல் பார்க் செயல்பட தொடங்கியவுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தரைத்தளத்தில் உணவு அருந்தமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவை மாவட்டத்தின் தனி அடையாளமாக இந்த எல்காட் ஐடி பார்க் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் இரண்டு அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 150 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 120 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உணவு அருந்தமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2 லட்சத்தும் 94 ஆயிரத்து 362 சதுர அடி பரப்பளவு முதல் தளத்தில் இருந்து ஐந்தாம் தளம் வரை, தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா மொத்தம் 2 லட்சத்தும் 94 ஆயிரத்து 362 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட துவங்கும் பட்சத்தில் கோவையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-suit-seeking-an-order-to-repair-the-roads-from-papanasam-to-agasthiyar-falls/
மக்கள் மகிழ்ச்சி : நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஐடி பூங்காவை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்திருப்பது கோவை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.