விருதுநகருக்கு இன்று செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..! 2 ந …

The News Collect
2 Min Read
  • தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று விருதுநகர் செல்கிறார். விருதுநகரில் மாவட்ட வாரியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், ‘கள ஆய்வில் முதல்வர் ‘ என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார். இந்த திட்டத்தில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்ட வாரியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அதன்படி கோவையில் முதல் முறையாக முதல்வர் மு.க ஸ்டாலின் கள ஆய்வு பணியை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில், 2 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விருதுநகர் செல்கிறார்.

சென்னையில் இருந்து இன்று காலையில் விமானத்தில் செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் 10.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை ஏர்போர்ட்டில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பினை திமுகவினர் அளிக்க உள்ளனர். மதுரையில் இருந்து காரில் விருதுநகர் செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு, சத்திரரெட்டியபட்டி விலக்கில் பிரமாண்ட வரவேற்பினை திமுகவினர் அளிக்கிறார்கள்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர். மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திறந்த வாகனத்தில் செல்லும் முதல்வர் முக ஸ்டாலின், பேரணியாக சென்று மக்களை சந்திக்க உள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/tiruchendur-petition-seeking-an-order-to-prohibit-the-collection-of-additional-fees-in-the-kanda-sashti-ceremony-of-subramania-swami-temple/

மாலை 6 மணி அளவில், விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள கந்தசாமி மண்டபத்தில் திமுகவினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். ரூ.77 கோடி மதிப்பில் 6 தளங்களாக இந்த புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திடங்களை அளிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி விருதுநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Share This Article
Leave a review