மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு.ஆபத்தை உணராமல் மழையில் நடந்த கொடூரம்.
குமரி மாவட்டம் ஆற்றூர் சித்தன் விளையை சேர்ந்தவர் சாம் இவரது மனைவி சித்ரா இவருக்கு நிதி என்கின்ற ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர் .இந்த நிலையில் இன்று மாலையில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது அஸ்வின் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றதாக தெரிகிறது.

அப்பொழுது இவர்களின் வீட்டின் அருகில் உள்ள தாமஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கூரை தகறின் கீழ் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பம்பொருத்தப்பட்டிருந்த தகடு மோதி சேதமடைந்ததில் மின்விளக்கின் ஓயர் அறுந்து அஸ்வினை தாக்கியது இதை பார்த்த தாய் சித்ரா மகனை காப்பாற்றமுயன்று உள்ளார்.
அப்பொழுது அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதை பார்த்த எட்டு மாத கற்பணியாக இருந்த மகள் ஆதிராவும் இவர்களை காப்பாற்ற முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கியதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலியான மூன்று பேரும் மழை பெய்ததால் யாரு கவனிக்காத நிலையில் அந்தப் பகுதியிலே கிடந்துள்ளனர். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள கவனித்த இவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக கொண்டு சேர்த்தனர் .அங்கு அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.