குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆட்சியர்,எம்.பி ஆறுதல்

0
89
ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்து உள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்ட மன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here