கோர்ட் அவமதிப்பு வழக்கு.. ”துக்ளக்” ஆசிரியர் குருமூர …

The News Collect
1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  •  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, குருமூர்த்திக்கு
    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள்,
யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் நிராகரித்துவிட்டார்.

ஆட்சி மாற்றத்துக்கு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், திரும்பப் பெற்றார்.

இந்நிலையில் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை ஊர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/dmk-alliance-is-strong-no-factions-will-form-government-for-7th-term-udhayanidhi-stalin/

அந்த மனுவில், அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, 12 வாரங்களில் பதிலளிக்கும்படி, குருமூர்த்திக்கு உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a review